Image Alt

Books

Tamil Combo

Original price was: ₹1050.Current price is: ₹680.

இந்தியா உருவாகுவதாக!

இந்திய நாட்டின் பண்பாட்டு வரலாற்றை உருவாக்குவதில் கிறிஸ்தவம் வகித்த பங்கு குறித்து பல சுவாரஸ்யமான உண்மைகளை அம்பலப்படுத்தும் புத்தகம்.

போர்னியோவிலிருந்து ஒலிக்கும் எதிரொலிகள்

போர்னியோவின் தலை வேட்டையாடும் பயங்கரமான பழங்குடியினர் வசிக்கும் மழைக்காடுகளில், மருத்துவ மிஷனரியியாக பணியாற்றிய ஒரு இந்தியரின் சுயசரிதை.

நவீீன இந்தியாவின் தந்தை: வில்லியம் கேரி

இந்தியாவை சீர்திருத்துவதற்காக பாடுபட்டு, நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்த ஒரு பிரிட்டிஷ் மிஷனரியின் வரலாறு.

Description

இந்தியா உருவாகுவதாக!

இப்புத்தகம், இந்தியாவின் வரலாற்றை கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்துகிறது. நாட்டின் பண்பாட்டு வரலாற்றை உருவாக்குவதில் கிறிஸ்தவம் வகித்த பங்கு குறித்து பல சுவாரஸ்யமான உண்மைகளை அம்பலப்படுத்துகிறது. இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வரலாற்றுச் செல்வாக்கைப் ஆராய விரும்புவோருக்கு இது ஒரு ஆழமான மற்றும் சிந்தனைத் தூண்டும் வாசிப்பு.

டாக்டர் . பாபு வர்கீஸ் ஓர் பத்திரிக்கை ஊடக வல்லுனர்.தொலைத் தொடர்பு ஆலோசக‍ர், வரலாற்று ஆசிரியர். இவர் எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி நூல் இந்திய மொழிகளின் வரலாற்று ரீதியான வளர்ச்சி, இலக்கியம், மொழியியல்,கல்வி, அச்சு, இதழியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஓர் எழுச்சியுட்டும் பேச்சாளர், இருபத்து ஐந்து நாடுகளுக்கு அதிகமான நாடுகளில் விரிவுரை ஆற்றியுள்ளார்

போர்னியோவிலிருந்து ஒலிக்கும் எதிரொலிகள்

போர்னியோவின் தலை வேட்டையாடும் பயங்கரமான பழங்குடியினர் வசிக்கும் மழைக்காடுகளில், மருத்துவ மிஷனரியியாக பணியாற்றிய ஒரு இந்தியரின் சுயசரிதை.

நவீீன இந்தியாவின் தந்தை: வில்லியம் கேரி

இந்துத்துவா சொல்வது சரிதான்: நவீன இந்தியா இந்துத்துவத்திலிருந்து தோன்றியதல்ல. அதனால் தான் மரபுவழி இந்துக்கள் அதனை சனாதன தர்மத்துடன் பொருந்தாததாகக் காண்கின்றனர்.

வில்லியம் கேரி இந்தியாவின் ஆன்மாவுக்குள் விதைத்த ஒரு புத்தகம், காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரின் இருதயத்தை தாக்கியது; அதனால் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்த முனைந்தனர்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, முகலாயர்கள், மராத்தியர்கள், மன்னர்கள் ஆகியோருடன் போராடியது தன் வருமானத்தைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மட்டுமே. வாய்வழி பேசப்படும் வட்டார மொழிகளை இலக்கிய மொழிகளாக்குவதில் அவர்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லை. “கீழ்சாதி” மக்களுக்கு கல்வி கற்பித்து, அவர்களை பிராமணர்களைப் போல் பண்டிதர்களாகவோ, மன்னர்களைப் போல் ஆட்சி செய்யவோ, வணிகர்களைப் போல் வியாபாரிகளாகவோ மாற்ற கொஞ்சம் கூட ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் வில்லியம் கேரி போன்ற தன்னலமற்ற மிஷனரிகளே, தொலைநோக்குடன், கடும் பாடுபட்டு, நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தார்கள். ஏனெனில், “தேவன் இந்தியாவை நேசிக்கிறார்; தனது ஒளியால் அதை ஆசீர்வதிக்கத் தீர்மானித்துள்ளார்,” என்று வேதம் சொல்லுவதை நம்பினார்கள்

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tamil Combo”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…