Image Alt

Books

பைபிளும் நவீன இந்தியாவின் உருவாக்கமும்

Original price was: ₹400.Current price is: ₹300.

சில அரசியல் வாதிகள் இந்திய நாட்டின் பெயரையும், அரசியலமைப்பையும் மாற்ற வேண்டுமென வலியுறுத்துகின்றனர். “இந்தியா” என்ற பெயரும் அதன் கருத்தாக்கமும் வேதாகம புத்தகத்திலிருந்தே வந்தது என்ற உண்மை அவர்களுக்கு இடர்ப்பாடாகவே தோன்றுகிறது.

Description

1492 ஆம் ஆண்டில், “இந்தியா” வைத் தேடி கடல் வழியாக கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் இலக்கை அடையவில்லை. 1498 ஆம் ஆண்டு வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டை (கேரளா) அடைந்தபோது, அங்கு வாழ்ந்த மக்கள் தமது நாட்டை “இந்தியா” என்று அழைக்கவில்லை என்பதை உணர்ந்தார். பின்னர் 1600 மற்றும் 1602 ஆம் ஆண்டுகளில், முறையே பிரிட்டிஷ் மற்றும் டச்சு ஆட்சியாளர்கள் இந்தோனேசியாவுடன்—அவர்கள் “ஆசிய இந்தியா” எனக் கருதிய பிராந்தியத்துடன்—வர்த்தகம் செய்வதற்காக தங்களின் கிழக்கு இந்திய கம்பெனிகளை நிறுவினர். அக்காலகட்டத்தில், முகலாயப் பேரரசை “இந்தியா” என்று ஐரோப்பியர்கள் கூட கருதவில்லை.

நவீன இந்தியா உருவாவதில் வேதாகமம் வகித்த பங்கினை ஆய்வு செய்யும் தொடரின் முதல் நூலாக இந்நூல் திகழ்கிறது. உண்மையில், சில இந்து அரசியல் வாதிகளுக்கும், சில மதச்சார்பற்ற வரலாற்றாசிரியர்களுக்கும் இந்நூலின் கருத்துக்கள் மனதிற்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கின்றன. அவர்கள் வேதாகமத்தை காலாவதியான, குழந்தைத்தனமான கதைகளின் தொகுப்பாகவே கருதிக் கொண்டு, அது எவ்வாறு மகத்தான நாடுகளை உருவாக்கி, கட்டியெழுப்பி, நிலைநிறுத்த முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பைபிளும் நவீன இந்தியாவின் உருவாக்கமும்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…